தாய் மொழியில் சில வார்த்தைகள் ...

தேவை முன்எச்சரிக்கை


சிறிய முன்எச்சரிக்கை பெரிய வருத்தங்களில் இருந்து காப்பாற்றும். எல்லா விதங்களிலும் முன்எச்சரிக்கையோடு செயல்படுங்கள். இது எதிர்மறை எண்ணமல்ல. உங்கள் வெற்றியை உறுதி செய்து கொள்ள ஓர் உன்னதமான வழி.



அனுபவம் மிக்கவர்களிடமும், சாதித்தவர்களிடமும்கற்றுகொள்ளுங்கள். மற்றவர்களின் அனுபவமும், அதன் விளைவாக வரும் அறிவுரையும் பலமடங்கு பெரியது.

ஆழ்ந்த கவனமும், தீவிர மனஉறுதியும் உள்ளவர்களுக்கே வெற்றிகள் சாத்தியம். மற்றவர்கள் உங்களை கேள்வி கேட்கும் முன்னர், நீங்களே உங்களைக் கேளுங்கள். உங்களிடம் விடைஉள்ளதா என்று பாருங்கள். 


பசித்திரு ! தனித்திரு ! விழித்திரு ! பதவி உயரும்.


ஒழுங்குகளுக்கும், நியதிகளுக்கும் உட்பட்ட வாழக்கை முறையைவகுத்துக் கொள்ளுங்கள். செய்ய விரும்புவதை விடவும் செய்ய வேண்டியதை செய்யுங்கள். உணர்வுகள் பிறப்பிக்கும் கட்டளைகளுக்கு அறிவின் ஒப்புதலை பெறுங்கள்.

நீங்கள் தரும் வாக்குறுதிகள் எவ்வளவு சிறியது என்றாலும் சரி, எவ்வளவு பெரியது என்றாலும் சரி, நன்கு யோசித்த பின்பே வழங்குங்கள்.

உங்கள் வளங்களிலேயே மகத்தானது நேரம் தான். ஒரு செயலுக்காக ஒதுக்கிய நேரத்தை வீண் செய்யாமல் பயன்படுத்துங்கள்.


கடிகாரத்தை காதில் வைத்துக் கேட்டால் ‘டிக், டிக்’ என்று கேட்கும். சிலபேருக்கு மட்டும் ‘குயிக், குயிக்’ என்று கேட்குமாம். ‘டிக் டிக் என்று கேட்பவர்கள் சாதாரணமானவர்கள். ‘குயிக் குயிக்’ என்று கேட்பவர்கள் சாதனையாளர்கள்.


நேரத்தை திருடாதே


உங்கள் வளங்களிலேயே மகத்தானது நேரம் தான். ஒரு செயலுக்காக ஒதுக்கிய நேரத்தை வீண் செய்யாமல் பயன்படுத்துங்கள்.

கடிகாரத்தை காதில் வைத்துக் கேட்டால் ‘டிக், டிக்’ என்று கேட்கும். சிலபேருக்கு மட்டும் ‘குயிக், குயிக்’ என்று கேட்குமாம். ‘டிக் டிக் என்று கேட்பவர்கள் சாதாரணமானவர்கள். ‘குயிக் குயிக்’ என்று கேட்பவர்கள் சாதனையாளர்கள்.

உங்கள் நேரத்தை நீங்களே திருடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

கவலையை வீழ்த்தும் மருந்து


எப்போதாவது நீங்கள் கவலையாக இருந்தால், உடனே புன்னகையை முகத்திற்கு கொண்டு வாருங்கள். அது கொஞ்சம் கடினமான காரியம் தான். அந்த நேரத்தில் எதாவது நகைச்சுவைதுணுக்குகள் நகைச்சுவை படங்கள் பாருங்கள். அந்த இறுக்கமான சூழல் நொடிபொழுதில் மாறிவிடும். உடனே மனதில் மகிழ்ச்சி பொங்கும், சூழலும் மாறும். கவலையே மனிதனை முடக்கும் எதிரி .. சிரிப்பே கவலையை விழ்த்தும் மருந்து.

உண்மையற்றவர்கள், எதிர்மறை சிந்தனை உள்ளவர்கள், சோம்பல் மிக்கவர்கள் ஆகியோரோடு உறவிருந்தால் உடனே... உடனே... துண்டியுங்கள். உங்கள் மனதிடம் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் இவர்கள் பக்கத்தில் இருந்தால் எளிதில் உங்களை பாதிக்கும். 


ஸ்மார்ட் வொர்க் - மணி


பணம் சம்பாதிக்கும் போதே அவற்றை சொத்துக்களாக உருவாக்கப்பழகுங்கள். அனைத்து வருமானங்களிலிருந்தும் 20 சதவீதம் சேமிப்புக்கு ஒதுக்குங்கள். அந்த சேமிப்பை நிரந்தரமான வருவாயாகவோ, சொத்தாகவோ மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். 



புதுமை

ஒரு மாதகால கடின உழைப்புக்கு இணையானதுஒரு மணி நீர சிந்தனையில் உதிக்கும் புதுமையான யோசனை. வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதை வாழ்கை முறையாகவே வகுத்துக் கொள்ளுங்கள்.